இஸ்லாமியரின் இந்திய வருகை இந்தியரின் நோக்கிலும் போக்கிலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றுப் போக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (கி.பி. 712) சிந்து அரேபியரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும் டெல்லி சுல்தானிய ஆட்சிக்கு காலத்தில்தான் (கி.பி. 971 - கி.பி. 1525) இஸ்லாமியர் இந்தியாவில் நிலையாகத் தங்கி அவர்களின் கலாச்சாரத்தை பரப்பினர். வடக்கில் டெல்லி சுல்தானியம் உச்சகட்டத்தில் இருந்த பொது தெற்கில் விஜயநகரப் பேரரசு (கி.பி. 1336 - கி.பி. 1576) ஆட்சியிலும் கலாச்சாரத்திலும் புதுமையைப் புகுத்தியது. தமிழ்நாடு நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது. இந்திய இடைக்கால வரலாறு ஆங்கிலேய�... See more
இஸ்லாமியரின் இந்திய வருகை இந்தியரின் நோக்கிலும் போக்கிலும் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றுப் போக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (கி.பி. 712) சிந்து அரேபியரால் ஆக்கிரமிக்கப்பட்டாலும் டெல்லி சுல்தானிய ஆட்சிக்கு காலத்தில்தான் (கி.பி. 971 - கி.பி. 1525) இஸ்லாமியர் இந்தியாவில் நிலையாகத் தங்கி அவர்களின் கலாச்சாரத்தை பரப்பினர். வடக்கில் டெல்லி சுல்தானியம் உச்சகட்டத்தில் இருந்த பொது தெற்கில் விஜயநகரப் பேரரசு (கி.பி. 1336 - கி.பி. 1576) ஆட்சியிலும் கலாச்சாரத்திலும் புதுமையைப் புகுத்தியது. தமிழ்நாடு நாயக்கர் ஆட்சியின் கீழ் வந்தது. இந்திய இடைக்கால வரலாறு ஆங்கிலேயர் பிளாசிப் போரில் (கி.பி. 1757) வெற்றி பெற்றதுடன் முடிவுக்கு வருகிறது. இடைக்கால இந்திய வரலாறு என்னும் இந்நூலில் இந்தியாவின் கிட்டத்தட்ட 800 ஆண்டு கால வரலாறு வரையப்பட்டுள்ளது. அரசியல் கலாச்சார மாற்றங்கள் உரிய விளக்கங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. மைய, மாநில அரசுகளின் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளை மனதில் கொண்டு இந்த நன்னூலை பேராசிரியர் முனைவர் கே.வெங்கடேசன் எழுதியுள்ளார். ஆட்சிப் பணியாளர் தேர்வுக்கு அருமையான நூல்.( இந்நூலை Shri Pathi Rajan Publishers-க்கு ஆணை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். புத்தகத்தின் இந்த விவரங்களை Shri Pathi Rajan Publishers அனுமதியின்றி எவ்வகையிலும் பயன்படுத்துதல் ஆகாது.)