அவருடைய வாழ்க்கைச் செய்திகளைத் தொகுத்து எழுதப்பட்ட புத்தகம். விவேகானந்தரைப் போல பாரதியார் 39 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார். அவை பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அவர் வாழ்வில் ஒளிர்விட்ட நிகழ்ச்சிகள் - உண்மையானவை, ஏற்கக் கூடியவை, மறுக்கக் கூடியவை - பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டன. இவ்வொளி முத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக்கிக் கோர்த்து, வாசகர்கள் படிக்க ஓர் அழகிய ஆபரணமாக இவ்வாசிரியர் அளித்திருக்கிறார். வ.வெ.சு.ஐயர், அரோபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா, வ.உ.சி., வாஞ்சிநாதன், முக்கியமாக அவருடைய அருமை அப்பாவி மனைவியான செல்லம்மா - இவர்களுடன் இணைந்து அவர் தன்னிகரில்லாத படைப்பாளியாகத் திகழ்ந்தார். இ�... See more
அவருடைய வாழ்க்கைச் செய்திகளைத் தொகுத்து எழுதப்பட்ட புத்தகம். விவேகானந்தரைப் போல பாரதியார் 39 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார். அவை பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அவர் வாழ்வில் ஒளிர்விட்ட நிகழ்ச்சிகள் - உண்மையானவை, ஏற்கக் கூடியவை, மறுக்கக் கூடியவை - பற்றி நிறைய பேசப்பட்டுவிட்டன. இவ்வொளி முத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக்கிக் கோர்த்து, வாசகர்கள் படிக்க ஓர் அழகிய ஆபரணமாக இவ்வாசிரியர் அளித்திருக்கிறார். வ.வெ.சு.ஐயர், அரோபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா, வ.உ.சி., வாஞ்சிநாதன், முக்கியமாக அவருடைய அருமை அப்பாவி மனைவியான செல்லம்மா - இவர்களுடன் இணைந்து அவர் தன்னிகரில்லாத படைப்பாளியாகத் திகழ்ந்தார். இது வாழ்க்கைச் சரிதம் அல்ல; பாரதியாருடைய புரட்சிகரமான, ஆக்ரோஷமான சிந்தனைகளின் வெளிப்பாடு ஆகும். படிப்பறிவு இல்லாத ஒரு மனிதனையும், தன்னுடைய எளிய, சரளமான எழுத்து நடையால், பாரதியார் நெருங்குகிறார். தமிழில் : பி. ஆர். மகாதேவன்