உலகின் மிகநெடியதும் செழுமையானதும் வெகுமதியளிப்பதுமான வரலாறுகளில் ஒன்றைப் பெற்றிருப்பதாக தெற்கு ஆசியா பெருமைப்படுகிறது. பல்வேறுபட்ட நாகரிகங்களும் மண்டல - பண்பாட்டு அடையாளங்களின் கலைடாஸ்கோப்பும் நிரம்பிய கடந்தகாலம் அது. நினைவுச் சின்னங்கள், ஆலயங்கள், சமாதிகள், அரண்மனைகளின் பூமியான அது, தொல்பழங்கால தொன்மங்களால் பின்னப்பட்டது. தொன்மையான வம்சாவழிகளிலிருந்து இஸ்லாமியப் படையெடுப்புகள் வரையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து பிரிவினையின் நிரடல் வரையும் விவாதத்திற்குள்ளாகும் பிரதேசமும் ஆகும். பிரிவினைக்குப் பின் பொருளாதாரத் துரித வளர்ச்சிவரையிலான நிகழ்வுகளை முழுமையாகக் கொண்ட இந்நூல... See more
உலகின் மிகநெடியதும் செழுமையானதும் வெகுமதியளிப்பதுமான வரலாறுகளில் ஒன்றைப் பெற்றிருப்பதாக தெற்கு ஆசியா பெருமைப்படுகிறது. பல்வேறுபட்ட நாகரிகங்களும் மண்டல - பண்பாட்டு அடையாளங்களின் கலைடாஸ்கோப்பும் நிரம்பிய கடந்தகாலம் அது. நினைவுச் சின்னங்கள், ஆலயங்கள், சமாதிகள், அரண்மனைகளின் பூமியான அது, தொல்பழங்கால தொன்மங்களால் பின்னப்பட்டது. தொன்மையான வம்சாவழிகளிலிருந்து இஸ்லாமியப் படையெடுப்புகள் வரையும், காலனிய ஆதிக்கத்திலிருந்து பிரிவினையின் நிரடல் வரையும் விவாதத்திற்குள்ளாகும் பிரதேசமும் ஆகும். பிரிவினைக்குப் பின் பொருளாதாரத் துரித வளர்ச்சிவரையிலான நிகழ்வுகளை முழுமையாகக் கொண்ட இந்நூல், துணைக் கண்டத்தின் மிக அதிகாரப்பூர்வமான வரலாறாக உள்ளது. சமூக,பொருளாதார, பண்பாட்டு பகுப்பாய்வை வழங்கி, உலகின் மிகச் சிக்கலானதும் முக்கியமானதுமான மண்டலங்களில் ஒன்றின் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் வசீகரிக்கும் ஆய்வாகும்.