VAO அதிகாரங்கள் மற்றும் கடமைகள் (கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல்) இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்த நூலின் தொகுதி I-இல் கிராம நிருவாக அலுவலர்களின் அதிகாரங்களும் கடமைகளும் இரண்டு பாகங்களின் கீழ் தரப்பட்டுள்ளன. பாகம் - 1 : கிராம அலுவலர்களின் அதிகாரங்களும் அலுவல்களும் (1) கிராம அலுவலர்களின் நிலை முதலியவை மற்றும் கிராம அலுவலர்களை நியமனம் செய்வது, தண்டிப்பது மற்றும் நீக்கிவிடுவது. (2) நீக்கப்பட்டது. (3) கிராம நிருவாக அலுவலரின் காவற்கடமைகள் (4) நிலவரி வசூல் (5) பலவகைப்பட்டவை. பாகம் - 2 : மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராமத்துப்புரவு (1) மக்கள் நல்வாழ்வு (2) கொள்ளை நோய்கள் மற்றும் இதர ந... See more
VAO அதிகாரங்கள் மற்றும் கடமைகள் (கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல்) இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்த நூலின் தொகுதி I-இல் கிராம நிருவாக அலுவலர்களின் அதிகாரங்களும் கடமைகளும் இரண்டு பாகங்களின் கீழ் தரப்பட்டுள்ளன. பாகம் - 1 : கிராம அலுவலர்களின் அதிகாரங்களும் அலுவல்களும் (1) கிராம அலுவலர்களின் நிலை முதலியவை மற்றும் கிராம அலுவலர்களை நியமனம் செய்வது, தண்டிப்பது மற்றும் நீக்கிவிடுவது. (2) நீக்கப்பட்டது. (3) கிராம நிருவாக அலுவலரின் காவற்கடமைகள் (4) நிலவரி வசூல் (5) பலவகைப்பட்டவை. பாகம் - 2 : மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராமத்துப்புரவு (1) மக்கள் நல்வாழ்வு (2) கொள்ளை நோய்கள் மற்றும் இதர நோய்கள் (3) நச்சுக்கடியும் கொட்டுதலும் (4) நஞ்சிடுதலும், தற்செயலாக நேரும் விபத்துகளும். தொகுதி II-இன் கீழ் பின்வரும் விதிகள் தரப்பட்டுள்ளன. அவை (1) தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் பணி விதிகள் 1980, (2) தமிழ்நாடு கிராம ஊழியர்கள் பணி விதிகள் 1980, (3) வருவாய் பண அஞ்சல் மூலம் நில வரித்தொகையினை செலுத்துவத்தைக் குறித்த சுற்றறிக்கை, (4) 1816-ஆம் வருடத்திய ஒழுங்குமுறை விதிகள் (தமிழ்நாடு அரசுக்குட்பட்ட பகுதிகள் முழுவதிலும் பொதுவான காவல் ஏற்பாட்டை நிறுவதற்கான ஒழுங்குமுறை விதிகள்) (5) 1816-ஆம் வருடத்திய 12-ஆவது ஒழுங்குமுறை விதி (கிராம நிலங்கள் தகராறுகளைக் குறித்த தமிழ்நாடு ஒழுங்குமுறை விதி) (6) 1821-ஆம் வருடத்திய 14வது ஒழுங்குமுறை விதி (தமிழ்நாடு கிராமக் காவலை குறித்த ஒழுங்குமுறை விதி) (7) பட்டா மாறுதல் புதிய நடைமுறை. கிராம நிருவாக அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இந்த நூல் மிகுந்த பயனைத் தரும்.