இந்நாவல் எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் துவக்கத்திலும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் எதிர் கொண்ட நிகழ்வுகளை மையப்படுத்தித் துவங்குகிறது. இயற்கையான வனம், சுத்தமான காற்று, தெளிந்த நீர்நிலைகள், இப்பழங்குடிகளின் வசிப்பிடங்களைச் சுற்றி இருந்தாலும், இம்மக்கள் ஆரோக்கியமற்றவர்களாய் இருப்பதன் புதிர் பலமுறை எனக்குள் எழுந்துள்ளது. அதற்கான காரணம், இடைவிடாது அம்மக்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள திகில் மூட்டும் அச்ச உணர்வு அவர்களின் எல்லா ஆரோக்கியத்தையும் அபகரித்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த அச்ச உணர்வு பழங்குடி மக்களின் மீதான பலவக�... See more
இந்நாவல் எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் துவக்கத்திலும் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் எதிர் கொண்ட நிகழ்வுகளை மையப்படுத்தித் துவங்குகிறது. இயற்கையான வனம், சுத்தமான காற்று, தெளிந்த நீர்நிலைகள், இப்பழங்குடிகளின் வசிப்பிடங்களைச் சுற்றி இருந்தாலும், இம்மக்கள் ஆரோக்கியமற்றவர்களாய் இருப்பதன் புதிர் பலமுறை எனக்குள் எழுந்துள்ளது. அதற்கான காரணம், இடைவிடாது அம்மக்களின் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள திகில் மூட்டும் அச்ச உணர்வு அவர்களின் எல்லா ஆரோக்கியத்தையும் அபகரித்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த அச்ச உணர்வு பழங்குடி மக்களின் மீதான பலவகைச் சுரண்டல்களின் விளைவாகும்.