ஓ, மனிதா!-ஒரு முன்னோட்டம்.'நான் எழுதத் தொடங்குவதற்கு முதற் காரணம் அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது; இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக்கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னல் எழுதாமல் இருக்க முடியவில்லை' என்கிறார் மார்க்சிம் கார்க்கி. இதே நிலைதான் நமது 'விந்தன்' எழுத்தாளன் ஆன கதையும்.மெத்தப் படித்த மேதா விலாசத்தினாலோ, கற்பனை கரைபுரண்டு ஓடியதாலோ, தமக்கு எல்லாம் தெரியும் என்கிற ஞானப் பேரொளியினலோ, 'தமிழ்' பணம் புரட்டும், சுரண்டும் ஒரு கருவி என்பதாலோ, இல்லை பொழுது போக்குக்காகவோ விந்தன் தம் எழுதுகோலை எடுக்கவில்லை. இலக்கியம் படைத்து இறவாப் புகழ் எய்த வேண்டும் என�... See more
ஓ, மனிதா!-ஒரு முன்னோட்டம்.'நான் எழுதத் தொடங்குவதற்கு முதற் காரணம் அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது; இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக்கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னல் எழுதாமல் இருக்க முடியவில்லை' என்கிறார் மார்க்சிம் கார்க்கி. இதே நிலைதான் நமது 'விந்தன்' எழுத்தாளன் ஆன கதையும்.மெத்தப் படித்த மேதா விலாசத்தினாலோ, கற்பனை கரைபுரண்டு ஓடியதாலோ, தமக்கு எல்லாம் தெரியும் என்கிற ஞானப் பேரொளியினலோ, 'தமிழ்' பணம் புரட்டும், சுரண்டும் ஒரு கருவி என்பதாலோ, இல்லை பொழுது போக்குக்காகவோ விந்தன் தம் எழுதுகோலை எடுக்கவில்லை. இலக்கியம் படைத்து இறவாப் புகழ் எய்த வேண்டும் என்றும் நினைத்ததில்லை. பிறர் பாராட்ட வேண்டும், பரிசுகள் பல பெற வேண்டும் என்று படைப்பாற்றல் 'பணி'யினைத் தொடங்கவில்லை.மாறாக அன்பற்ற மனிதர்கள் ஒருவரை ஒருவர் பிழிந்தெடுக்கப்படுவதையும், சுரண்டப்படுவதையும் கண்ணாரக் கண்டார். உண்மையின் பேரால் உலகில் நூற்றுக்குத் தொண்ணுாற்றைந்து பேர் பொய் புனைசுருட்டில் தம் வாழ்வை நடத்தி நாகரிகமானவர்கள், உயர்ந்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய சான்றோர்கள் என்று போலிகளாக வாழ்வதை, சிலர் வாழ, பலர் வதைபடுவதை உணர்ந்தார். அந்த உணர்வின் விளைவே அவரின் அனைத்து எழுத்துகளும்.