நாட்டுக்கு உழைத்த நல்லவர் “நல்லவனாக வாழ்” - நல்ல அறிவுரைதான்! எப்படி நல்லவனாக வாழ்வது? தாய் சொல்லிய வீரக் கதைகளைக் கேட்டுப் பெரிய வீரரானார், சிவாஜி; அரிச்சந்திரன் கதையினால் சத்தியம் தவறாத மகானானார், மகாத்மா காந்தி. இவர்கள் போன்ற நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் நிச்சயம் நல்லவனாக வாழலாம். நம் நாட்டிலே தோன்றிய வீரர்கள், தேச பக்தர்கள், அறிஞர்கள், மகான்கள் எத்தனை எத்தனையோ பேர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நல்ல தமிழில், எளிய நடையில் ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்’ என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். இவ்வரிசை நூல்களை வ�... See more
நாட்டுக்கு உழைத்த நல்லவர் “நல்லவனாக வாழ்” - நல்ல அறிவுரைதான்! எப்படி நல்லவனாக வாழ்வது? தாய் சொல்லிய வீரக் கதைகளைக் கேட்டுப் பெரிய வீரரானார், சிவாஜி; அரிச்சந்திரன் கதையினால் சத்தியம் தவறாத மகானானார், மகாத்மா காந்தி. இவர்கள் போன்ற நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்தால் நிச்சயம் நல்லவனாக வாழலாம். நம் நாட்டிலே தோன்றிய வீரர்கள், தேச பக்தர்கள், அறிஞர்கள், மகான்கள் எத்தனை எத்தனையோ பேர். அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நல்ல தமிழில், எளிய நடையில் ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர்’ என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். இவ்வரிசை நூல்களை வரிசையாய் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். - பழனியப்பா பிரதர்ஸ்