‘வெறுப்பை வெறுப்பால் வென்றெடுக்க முடியாது, வெறுப்பை அன்பால் மட்டுமே வென்றெடுக்க முடியும்.’ - தம்மபதம் இந்துக்களுக்கு எதிரானவராக அண்ணலை நிறுத்துவார்கள். இந்துமதத்துக்கு எதிரானதாக அண்ணலின் எழுத்துக்களை நிறுத்துவார்கள். உண்மையில் அண்ணலின் இந்த நூல் இந்துக்களுக்கானது. ஒவ்வொரு இந்துவும் படித்து உணர வேண்டிய புத்தகம் இது. எளிய இந்து ஒருவர் வெறும் சடங்காகவும், பண்டிகைகளாகவும், கோவில், பக்தி என அறிந்த ஒரு மதத்தின் தத்துவப் பக்கத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம். இந்து மதத்தை வெறுமனே பின்பற்றாமல் இந்துமதத்தின் தத்துவத்தை அறிந்து கொள்வது ஒரு இந்துவுக்கு நிச்சயமாக நன்மையையே செய்யும்... See more
‘வெறுப்பை வெறுப்பால் வென்றெடுக்க முடியாது, வெறுப்பை அன்பால் மட்டுமே வென்றெடுக்க முடியும்.’ - தம்மபதம் இந்துக்களுக்கு எதிரானவராக அண்ணலை நிறுத்துவார்கள். இந்துமதத்துக்கு எதிரானதாக அண்ணலின் எழுத்துக்களை நிறுத்துவார்கள். உண்மையில் அண்ணலின் இந்த நூல் இந்துக்களுக்கானது. ஒவ்வொரு இந்துவும் படித்து உணர வேண்டிய புத்தகம் இது. எளிய இந்து ஒருவர் வெறும் சடங்காகவும், பண்டிகைகளாகவும், கோவில், பக்தி என அறிந்த ஒரு மதத்தின் தத்துவப் பக்கத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம். இந்து மதத்தை வெறுமனே பின்பற்றாமல் இந்துமதத்தின் தத்துவத்தை அறிந்து கொள்வது ஒரு இந்துவுக்கு நிச்சயமாக நன்மையையே செய்யும். இந்துமதத்தின் தத்துவப் பகுதியை அறிமுகப்படுத்துவதோடு அதை விமர்சனத்தோடு அணுகுவதுதான் இந்த புத்தகத்தின் மையக்கருத்து. இதன் மூலம் கிடைக்கும் அனுபவம் அலாதியானது.