ஷுன்மியோ மசுனோ, ஜப்பானிலுள்ள 450 ஆண்டுகள் பழமையான ஜென் புத்த மதக் கோவிலின் தலைமைத் துறவியாக இருந்து வருகிறார். பல பரிசுகளைப் பெற்றிருக்கும் ஜென் தோட்ட வடிவமைப்பாளரான அவர், உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜென் தோட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறார். ஜப்பானிலுள்ள ஒரு பிரபல ஓவியக் கல்லூரியில் சுற்றுச்சூழல் வடிவமைப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்ற அவர், உலகெங்கும் எண்ணற்றச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஹார்வர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் டிசைன், கார்னெல் பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவையா�... See more
ஷுன்மியோ மசுனோ, ஜப்பானிலுள்ள 450 ஆண்டுகள் பழமையான ஜென் புத்த மதக் கோவிலின் தலைமைத் துறவியாக இருந்து வருகிறார். பல பரிசுகளைப் பெற்றிருக்கும் ஜென் தோட்ட வடிவமைப்பாளரான அவர், உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜென் தோட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறார். ஜப்பானிலுள்ள ஒரு பிரபல ஓவியக் கல்லூரியில் சுற்றுச்சூழல் வடிவமைப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்ற அவர், உலகெங்கும் எண்ணற்றச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஹார்வர்டு கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் டிசைன், கார்னெல் பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் அவர் நிகழ்த்தியுள்ள சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.