எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்துகொள்ளாமல் வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். இந்த காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவுக்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக்கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் அல்லது உபாதை ஏற்படுத்துமா என்பதை... See more
எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்துகொள்ளாமல் வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். இந்த காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை போன்ற பற்பல வாழ்வியல் நோய்களுக்கும் உணவுக்கும் நேரடி சம்பந்தம் இருக்கின்றது என்பதை நாம் உணர்வதே இல்லை. உணவு முறையில் தொலைத்த ஆரோக்கியத்தை மருந்துகளில் தேடிக்கொண்டிருக்கிறோம். உணவுப் பொருள்களின் தன்மை, அந்த உணவுகள் நம் ஆரோக்கியத்துக்கு எப்படி உதவும் அல்லது உபாதை ஏற்படுத்துமா என்பதை விளக்கி ஆனந்த விகடனில் வெளியான `ஆரோக்கியம் ஒரு பிளேட்' கட்டுரைகளின் முதல் தொகுப்பு நூல் ஏற்கெனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளின் இரண்டாம் தொகுப்பு நூல் இது. நாம் அன்றாடம் பயன்படுத்துகிற எல்லா உணவுப் பொருள்களையும் பகுத்தறிந்து, நவீன உணவுகள் மட்டுமல்ல, பாரம்பர்ய உணவுகள் குறித்தும், காய்கறிகளின் தன்மை, சைவ, அசைவ உணவுகளின் சாதக பாதகங்களையும் விளக்கமாகக் கூறுகிறது இந்த நூல். உணவுப் பொருள்களின் உண்மைத்தன்மையை விளக்கி ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது!